Friday, February 26, 2016

ஆயிரம் பிறை கண்டவர்கள் என்றால் என்ன ?

"80 வயது ஆனவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம்.

ஆயிரம் பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது? "

80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம் பிறையை கண்டவர்கள் என்கிறோம். 80வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில    வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில்30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் நிறைவுபெறும் "

ஆயிரம் பிறை கண்ட வாழ்வு
ஆயிரம் பிறை காணுகிற பெரியவருக்கு, ஆயிரம் பிறைகளைக் கணக்கிட்டால் 83 ஆண்டுகள்அவர் கடந்தாக வேண்டும். அவர் 80வது ஆண்டினை நிறைவு செய்கின்ற பொழுதே அவரைஆயிரம் பிறை கண்டவர் என்று ஆசி பெறுகிறோம்.

கணக்குப்படி அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால், நடைமுறையோ 80 என்று எடுத்துக்கொள்கிறோம். பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலாகவும், குறைவாகவும் வரலாம். அந்தக்கணக்கின்படி, இந்த 80 ஆண்டுகளும் சற்றுக் கூடலாம்.

80 வயதைக் கடந்தாலே அது ஒரு பூரண வாழ்வு பெற்றவடா எனப் பெருமிதம் அடைகிறோம்.

80 வயது பூர்த்தி என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம் என்று சொல்வதற்குக் காரணம், அந்த 80வயதிற்குள் 20-வது வயதிலிருந்து 60 ஆண்டுக் காலத்திற்கான, சம்பந்தப்பட்டவர்களுடையசெயல்கள் பதிவாகியிருக்கும். அந்தப் பதிவுகள் அனைத்துமே அவர்பட்ட தோல்விகளாகவோஅல்லது வெற்றிகளாகவோ இருக்கும். மேலும் அவர் தமிழ் 60 ஆண்டுகளையும் பூரணமாக கடந்து செல்லும் பாக்யம் பெறுகிறார். அத்தகைய சிறப்பு பெற்றவர்களாகிறார்கள் ஆயிரம் பிறை கண்டவர்கள்.

30 ஆண்டுகளில் அவர் தோல்வி கண்டிருந்தால், மேலும் ஐந்து ஆண்டுகளோ, பத்தாண்டுகளோசெலவழித்து அந்தத் தோல்வியை வெற்றியாக்கி இருப்பார். அந்த ரகசியம் அவருக்குத்தான்தெரியும்.

அது அவருடைய 60 ஆண்டு வாழ்வியல் சரித்திரத்தை நினைவுகூர்ந்தால் அவர்சிந்தனையிலிருந்து அது உடனே வெளிப்படும். இப்படித்தான் 80 ஆண்டு பெரியவரின் வாழ்க்கை, 60 ஆண்டு  பேசும் சரித்திரமாக நம் முன்னால் உலவும்.

நாம் பெருமிதமாக நினைப்பது இந்தச் சரித்திரத்தையே தவிர, அவருடைய சரீரத்தை அல்ல.

பொதுவாக ஒருவருடைய வயது பிரசவத்திற்குப் பிறகுதான் கணக்கிடப்படுகிறது. ஆணோ,பெண்ணோ அது கருவிலிருக்கும்போதே கணக்கிடப்பட வேண்டும்.

அப்படியென்றால், பிறந்த குழந்தையினுடைய வயது அன்றைய ஒரு நாள் அல்ல. பத்து மாதம்ஒரு நாள் என்பதுதான் சரியானது. (300 + 1 நாள் = 301 நாட்கள்).

அந்த ஒரு & நாள் குழந்தையின் வயது 301 நாட்களாகும். பிறந்த குழந்தை ஆணாக இருந்தால்,நான்கு படிகளை அது கடந்தாக வேண்டும். பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற இந்த நான்கும் ஆணுக்கு மட்டுமே பேசப்பட்டுள்ளது.

60 ஆண்டை சம்ஸ்கிருதத்தில் சஷ்டியப்தபூர்த்தி என்கிறார்கள். 70 ஆண்டு நிறைவை பீமரத சாந்திஎன்கிறார்கள். 80 ஆண்டு நிறைவை சதாபிஷேகம் என்கிறார்கள்.

சதாபிஷேகம் காணும் முதிய தம்பதிகள் அதிகமாக இல்லை. அப்படி இருப்பார்களேயானால், அதுஅவர்களின் பிள்ளைகள் செய்த பாக்கியமாகும். இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

தருமபுத்திரர் செய்த ராஜசூய யாகத்தைக் காண்பதற்காகச் சனகாதிகள் போயிருந்தார்களாம்.அவர்கள் போனதற்கான காரணம், தருமபுத்திரரின் ராஜசூய யாகத்திற்கு வாசுதேவர் வருவார்.

அவ்வாறு வந்தால், அவரை வணங்கலாம் என்பதுதான் அவர்களின் ஆசையாகும். அவர்கள்எதிர்பார்த்தபடி வந்த வாசுதேவரோ, ஒரு காரியத்தைச் செய்தார். ராஜசூய யாகத்தில் கலந்துசிறப்பிக்க வந்திருந்த சில முதியவர்களை வாசுதேவர் பாத நமஸ்காரம் செய்தார்.

வாசுதேவரை வணங்குவதற்காகக் காத்திருந்த சனகாதிகளுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.அதனால் வாசுதேவரிடமே சென்று இது என்ன? நாங்களெல்லாம் உங்களை வணங்கக்காத்திருக்கிறோம். ஏன் உலகமே உங்களைத்தான் வணங்குகிறது. அத்தகைய நீங்களோ, வேறுயாரையோ நமஸ்கரிக்கிறீர்களே என்று பரமாத்மாவாகிய கண்ணபிரானிடமே கேட்டனர்.

பகவான் சொன்ன பதிலோ, சனகாதிகளுக்கு மேலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதற்கானசமஸ்கிருத சுலோகத்தைத் தமிழ்ப்படுத்தினால், நான் 6 முக்கியமானவர்களை வணங்குகிறேன்.அவர்கள் வணங்கத் தக்கவர்கள். என்னால் வணங்கத்தக்கவர்கள் என்றால், அவர்கள் 6 பேரும்எப்பேர்ப்பட்டவர்கள் என்று எண்ணிப் பாருங்கள் என்றார்.

அவர்கள் யார் என்று கேட்க, பகவான் கூறினார் 1.தினசரி அன்னம் பாலிப்பவன், 2.வாலிபவயதிலேயே யாகம் செய்பவன், 3.உலகத்தை ஒரு நாள், இரு நாள் அல்ல, மாதக்கணக்கில்,வருடக்கணக்கில் மேற்கொள்பவன், 4.கற்புக்கரசியாக வாழ்கிற பெண்கள், 5.பிரமமத்தைஅறிந்த ஞானிகள். இந்த ஐவர்களை மட்டுமல்ல, 6 வதாகவும் ஒருவர் இருக்கிறார். அவர்தான்ஆயிரம்பிறை கண்ட பெரியவர் என்கிறார் வாசுதேவர்.

கிருஷ்ண பகவானை உயிர்கள் அனைத்தும் நமஸ்கரிக்கின்றன. அவரோ சதாபிஷேகம்செய்யப்படும் சான்றோரை வணங்குகிறார் என்றால், ஆயிரம்பிறை காண்பவருக்கு எத்தனைப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை நித்யசூரிகளான சனகாதிகளேபுரிந்துகொள்ளும்படி கூறினார்.

இந்த ஆயிரம்பிறை சதாபிஷேகத்தை அதிருத்ர யாகம் செய்தும் கொண்டாடலாம் என்கிறதுநமது புராணங்கள்.

அதிருத்ர யாகம் என்பது அண்மையில் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற போது தக்ஷண கர்நாடகா மாநிலத்தில் இருந்து கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள் வேதசுலோகங்களை இடைவிடாது ஓதி நிறைவு செய்கிற போது, அவை கார்மேகங்களையேஒன்றுதிரட்டி வெள்ளம்போல் மழையைப் பெய்யச் செய்யும் சக்தியுடையதாக அமைந்தது. இதில் ஏராளமான அன்பர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் பிரார்த்தனை செய்தனர்.

ருத்ரகாதசினீ என்று இன்னொரு யாகம். அதைச் செய்வதன்மூலம் சதாபிஷேகம் கண்டவர் தனதுவாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் பாவம் செய்திருந்தால், இந்த யாகம் அதைப்போக்கும் சக்தியுடையதாக அமைகிறது.

இதைப் போன்றதுதான் மகாருத்ர யாகம். ருத்ரகாதசினீ யாகத்தை பதினோரு கலசங்கள்வைத்து ஜபம் செய்வதாகும். ஒவ்வொரு கலசத்திலும் ஒரு ருத்திரர் ஆவாகனம் செய்யப்படுவார்.இதை 11 முறை செய்வதுதான் மகாருத்ர யாகமாகும். 121 முறை செய்வதுதான் அதிருத்ரயாகமாகும்.

இத்தனை யாகங்களையும் செய்தால், அதற்கு உரியவன் எந்தப் பாவம் செய்திருந்தாலும்அதிலிருந்து விடுதலை பெறுவான் என்பது ஐதீகம். மேலும் தன்வந்திரி பீடத்தில் பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. அந்த இடத்தின் மகிமை மேலும் பல நன்மைகளை ஆயிரம் பிறை கண்ட தம்பதிகளுக்கும் அதில் பங்கேற்க வந்த குடும்பத்தினர்களுக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமல்ல. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் சித்திக்கும். இதற்குச் சமமான ஜபம்வேதஸ்மிருதி எதிலும் இல்லை. இப்புண்ணியருக்கு அந்த யாகம் செய்த பிறகு வைக்கப்படும்நாமகரணம் சகஸ்ர சந்திர தர்சி என்பதாகும்.

சதாபிஷேகம் கண்டவரும், அவருடைய தர்மபத்தினியும் அந்த நிமிடம் முதல் பார்வதி பரமேஸ்வர தம்பதியாக மாறிவிடுகிறார்கள். இவர்களை நமஸ்கரித்து நாம் ஆசி பெற்றால்,அவர்கள் நம்மை வாழ்த்தும் வாக்கு அப்படியே பலித்து நன்மை உண்டாகும்.

இந்த சாந்தியைச் செய்து ஆயிரம்பிறை கண்ட தெய்வத் திருவுருவங்களாகப் பேறுபெற்றவர்களை நாம் வணங்கினால் நீண்ட ஆயுள், தேக ஆரோக்கியம், ஐஸ்வர்யம்முதலியவற்றைப் பெற்று நூறு ஆண்டுகள் நாம் வாழும் பாக்யம் பெறுவோம் என்பது ஆன்மிகநம்பிக்கையாகும்.


2 comments:

Unknown said...

Excellent article from my friend ShriRaman. I make few observations from my partial knowledge. Ten months should refer ten lunar months. In ladies circle, months are counted when full moon day (some places no moon day) crosses resulting partial month also counted as one month. Invariably ten month pregnancy involve one (or sometimes two) partial lunar month. Generally the physicians take 265-270 days as the carrying time before delivery taking effect. Swaminathan

msc07-12 said...

வணக்கம் ! தங்களின் ஜாதக ரீதியா இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம் , தில ஹோமம், சாந்தி ஹோமம் ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்
விருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம் ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி ,நவகிரஹ,சுதர்சன , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )
Face புக் பேஜ் : (group)https://www.facebook.com/groups/1444138238950905/

Hi I am R.Vijaya sarathi ARCHAGAR we are performing pithuru thosam,thaRA thosam thiilaa Homam in THIRUPULANI,rameswaram(thanushkodi)and parihara homam like naga sarpa dosam, saptarishi,navagarah­­a Homam, etc... for all in their home and also in temples so kindly refer us for any homam, kalyanam,girahapirav­­esam(housewarming) ,kumbabisegam further contact 9442084316(what up),89034­­01310
sarathi2003@gmail.co­­m,and also share with UR friends and relationship
By Vijaysarathi.R (Archagar):

Officalpage:https://www.facebook.com/poojaandhomams/

Please forward to all UR friends and relationship circle it may use to some one.

എല്ലാവിധ ഹോമങ്ങളും, കർമങ്ങളും നടത്തി കൊടുക്കപ്പെടും.
ബന്ധപ്പെടേണ്ട നമ്പർ - വിജയ് അയ്യങ്കാർ.(what's up) 09442084316, 08903401310.
sarathi2003@gmail.com
NB:- പിതൃഹോമം, പിതൃബലി എന്നിവ രാമേശ്വരത്തിലും നടത്തിക്കൊടുക്കപ്പെടും.