”உலகின் இரண்டு பெரிய ஆறுகளில் ஒன்று, அமேசான் ஆறு. இதன் நீளம் 6,400 கிலோமீட்டருக்கும் மேல்.
நைல் நதியின் நீளம் 6,650 கிலோமீட்டருக்கும் மேல் என வரையறுக்கப்படுகிறது.
எனவே, உலகின் நீளமான ஆறு, ‘நைல்’ என்று சொல்கிறார்கள்.
ஆனால், பிரேசில் மற்றும் பெரு நாட்டு அறிஞர்கள், இந்தக் கணக்கை ஏற்க மறுத்து, அமேசான் ஆறுதான் நீளமானது என்கிறார்கள்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு, ஈக்குவேடர், பிரேசில் போன்ற நாடுகளில் பாயும் அமேசான் ஆற்றின் துணை ஆறுகள், 1,000-க்கும் மேலே உள்ளன.
அமேசான் ஆற்றின் சிறப்புகளில் ஒன்று, இந்த ஆற்றின் குறுக்கே எந்த இடத்திலும் பாலம் கட்டப்படவில்லை.
காரணம், இதன் பாதை பெரும்பாலும் காடுகளிலும் நகரின் எல்லைகளிலுமே உள்ளன.”
No comments:
Post a Comment