Pages

Friday, February 26, 2016

ஆயிரம் பிறை கண்டவர்கள் என்றால் என்ன ?

"80 வயது ஆனவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம்.

ஆயிரம் பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது? "

80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம் பிறையை கண்டவர்கள் என்கிறோம். 80வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில  வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில்30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் நிறைவுபெறும் "

ஆயிரம் பிறை கண்ட வாழ்வு
ஆயிரம் பிறை காணுகிற பெரியவருக்கு, ஆயிரம் பிறைகளைக் கணக்கிட்டால் 83 ஆண்டுகள்அவர் கடந்தாக வேண்டும். அவர் 80வது ஆண்டினை நிறைவு செய்கின்ற பொழுதே அவரைஆயிரம் பிறை கண்டவர் என்று ஆசி பெறுகிறோம்.

கணக்குப்படி அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால், நடைமுறையோ 80 என்று எடுத்துக்கொள்கிறோம். பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலாகவும், குறைவாகவும் வரலாம். அந்தக்கணக்கின்படி, இந்த 80 ஆண்டுகளும் சற்றுக் கூடலாம்.

80 வயதைக் கடந்தாலே அது ஒரு பூரண வாழ்வு பெற்றவடா எனப் பெருமிதம் அடைகிறோம்.

80 வயது பூர்த்தி என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம் என்று சொல்வதற்குக் காரணம், அந்த 80வயதிற்குள் 20-வது வயதிலிருந்து 60 ஆண்டுக் காலத்திற்கான, சம்பந்தப்பட்டவர்களுடையசெயல்கள் பதிவாகியிருக்கும். அந்தப் பதிவுகள் அனைத்துமே அவர்பட்ட தோல்விகளாகவோஅல்லது வெற்றிகளாகவோ இருக்கும். மேலும் அவர் தமிழ் 60 ஆண்டுகளையும் பூரணமாக கடந்து செல்லும் பாக்யம் பெறுகிறார். அத்தகைய சிறப்பு பெற்றவர்களாகிறார்கள் ஆயிரம் பிறை கண்டவர்கள்.

30 ஆண்டுகளில் அவர் தோல்வி கண்டிருந்தால், மேலும் ஐந்து ஆண்டுகளோ, பத்தாண்டுகளோசெலவழித்து அந்தத் தோல்வியை வெற்றியாக்கி இருப்பார். அந்த ரகசியம் அவருக்குத்தான்தெரியும்.

அது அவருடைய 60 ஆண்டு வாழ்வியல் சரித்திரத்தை நினைவுகூர்ந்தால் அவர்சிந்தனையிலிருந்து அது உடனே வெளிப்படும். இப்படித்தான் 80 ஆண்டு பெரியவரின் வாழ்க்கை, 60 ஆண்டு – பேசும் சரித்திரமாக நம் முன்னால் உலவும்.

நாம் பெருமிதமாக நினைப்பது இந்தச் சரித்திரத்தையே தவிர, அவருடைய சரீரத்தை அல்ல.

பொதுவாக ஒருவருடைய வயது பிரசவத்திற்குப் பிறகுதான் கணக்கிடப்படுகிறது.ஆணோ,பெண்ணோ அது கருவிலிருக்கும்போதே கணக்கிடப்பட வேண்டும்.

அப்படியென்றால், பிறந்த குழந்தையினுடைய வயது அன்றைய ஒரு நாள் அல்ல. பத்து மாதம்ஒரு நாள் என்பதுதான் சரியானது. (300 + 1 நாள் = 301 நாட்கள்).

அந்த ஒரு & நாள் குழந்தையின் வயது 301 நாட்களாகும். பிறந்த குழந்தை ஆணாக இருந்தால்,நான்கு படிகளை அது கடந்தாக வேண்டும். பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற இந்த நான்கும் ஆணுக்கு மட்டுமே பேசப்பட்டுள்ளது.

60 ஆண்டை சம்ஸ்கிருதத்தில் சஷ்டியப்தபூர்த்தி என்கிறார்கள். 70 ஆண்டு நிறைவை பீமரத சாந்திஎன்கிறார்கள். 80 ஆண்டு நிறைவை சதாபிஷேகம் என்கிறார்கள்.

சதாபிஷேகம் காணும் முதிய தம்பதிகள் அதிகமாக இல்லை. அப்படி இருப்பார்களேயானால், அதுஅவர்களின் பிள்ளைகள் செய்த பாக்கியமாகும். இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

தருமபுத்திரர் செய்த ராஜசூய யாகத்தைக் காண்பதற்காகச் சனகாதிகள் போயிருந்தார்களாம்.அவர்கள் போனதற்கான காரணம், தருமபுத்திரரின் ராஜசூய யாகத்திற்கு வாசுதேவர் வருவார்.

அவ்வாறு வந்தால், அவரை வணங்கலாம் என்பதுதான் அவர்களின் ஆசையாகும். அவர்கள்எதிர்பார்த்தபடி வந்த வாசுதேவரோ, ஒரு காரியத்தைச் செய்தார். ராஜசூய யாகத்தில் கலந்துசிறப்பிக்க வந்திருந்த சில முதியவர்களை வாசுதேவர் பாத நமஸ்காரம் செய்தார்.

வாசுதேவரை வணங்குவதற்காகக் காத்திருந்த சனகாதிகளுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.அதனால் வாசுதேவரிடமே சென்று இது என்ன? நாங்களெல்லாம் உங்களை வணங்கக்காத்திருக்கிறோம். ஏன் உலகமே உங்களைத்தான் வணங்குகிறது. அத்தகைய நீங்களோ, வேறுயாரையோ நமஸ்கரிக்கிறீர்களே என்று பரமாத்மாவாகிய கண்ணபிரானிடமே கேட்டனர்.

பகவான் சொன்ன பதிலோ, சனகாதிகளுக்கு மேலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதற்கானசமஸ்கிருத சுலோகத்தைத் தமிழ்ப்படுத்தினால், நான் 6 முக்கியமானவர்களை வணங்குகிறேன்.அவர்கள் வணங்கத் தக்கவர்கள். என்னால் வணங்கத்தக்கவர்கள் என்றால், அவர்கள் 6 பேரும்எப்பேர்ப்பட்டவர்கள் என்று எண்ணிப் பாருங்கள் என்றார்.

அவர்கள் யார் என்று கேட்க, பகவான் கூறினார் 1.தினசரி அன்னம் பாலிப்பவன், 2.வாலிபவயதிலேயே யாகம் செய்பவன், 3.உலகத்தை ஒரு நாள், இரு நாள் அல்ல, மாதக்கணக்கில்,வருடக்கணக்கில் மேற்கொள்பவன், 4.கற்புக்கரசியாக வாழ்கிற பெண்கள், 5.பிரமமத்தைஅறிந்த ஞானிகள். இந்த ஐவர்களை மட்டுமல்ல, 6 வதாகவும் ஒருவர் இருக்கிறார். அவர்தான்ஆயிரம்பிறை கண்ட பெரியவர் என்கிறார் வாசுதேவர்.

கிருஷ்ண பகவானை உயிர்கள் அனைத்தும் நமஸ்கரிக்கின்றன. அவரோ சதாபிஷேகம்செய்யப்படும் சான்றோரை வணங்குகிறார் என்றால், ஆயிரம்பிறை காண்பவருக்கு எத்தனைப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை நித்யசூரிகளான சனகாதிகளேபுரிந்துகொள்ளும்படி கூறினார்.

இந்த ஆயிரம்பிறை சதாபிஷேகத்தை அதிருத்ர யாகம் செய்தும் கொண்டாடலாம் என்கிறதுநமது புராணங்கள்.

அதிருத்ர யாகம் என்பது அண்மையில் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற போது தக்ஷண கர்நாடகா மாநிலத்தில் இருந்து கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள் வேதசுலோகங்களை இடைவிடாது ஓதி நிறைவு செய்கிற போது, அவை கார்மேகங்களையேஒன்றுதிரட்டி வெள்ளம்போல் மழையைப் பெய்யச் செய்யும் சக்தியுடையதாக அமைந்தது. இதில் ஏராளமான அன்பர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் பிரார்த்தனை செய்தனர்.

ருத்ரகாதசினீ என்று இன்னொரு யாகம். அதைச் செய்வதன்மூலம் சதாபிஷேகம் கண்டவர் தனதுவாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் பாவம் செய்திருந்தால், இந்த யாகம் அதைப்போக்கும் சக்தியுடையதாக அமைகிறது.

இதைப் போன்றதுதான் மகாருத்ர யாகம். ருத்ரகாதசினீ யாகத்தை பதினோரு கலசங்கள்வைத்து ஜபம் செய்வதாகும். ஒவ்வொரு கலசத்திலும் ஒரு ருத்திரர் ஆவாகனம் செய்யப்படுவார்.இதை 11 முறை செய்வதுதான் மகாருத்ர யாகமாகும். 121 முறை செய்வதுதான் அதிருத்ரயாகமாகும்.

இத்தனை யாகங்களையும் செய்தால், அதற்கு உரியவன் எந்தப் பாவம் செய்திருந்தாலும்அதிலிருந்து விடுதலை பெறுவான் என்பது ஐதீகம். மேலும் தன்வந்திரி பீடத்தில் பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. அந்த இடத்தின் மகிமை மேலும் பல நன்மைகளை ஆயிரம் பிறை கண்ட தம்பதிகளுக்கும் அதில் பங்கேற்க வந்த குடும்பத்தினர்களுக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமல்ல. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் சித்திக்கும். இதற்குச் சமமான ஜபம்வேதஸ்மிருதி எதிலும் இல்லை. இப்புண்ணியருக்கு அந்த யாகம் செய்த பிறகு வைக்கப்படும்நாமகரணம் சகஸ்ர சந்திர தர்சி என்பதாகும்.

சதாபிஷேகம் கண்டவரும், அவருடைய தர்மபத்தினியும் அந்த நிமிடம் முதல் பார்வதி –பரமேஸ்வர தம்பதியாக மாறிவிடுகிறார்கள். இவர்களை நமஸ்கரித்து நாம் ஆசி பெற்றால்,அவர்கள் நம்மை வாழ்த்தும் வாக்கு அப்படியே பலித்து நன்மை உண்டாகும்.

இந்த சாந்தியைச் செய்து ஆயிரம்பிறை கண்ட தெய்வத் திருவுருவங்களாகப் பேறுபெற்றவர்களை நாம் வணங்கினால் நீண்ட ஆயுள், தேக ஆரோக்கியம், ஐஸ்வர்யம்முதலியவற்றைப் பெற்று நூறு ஆண்டுகள் நாம் வாழும் பாக்யம் பெறுவோம் என்பது ஆன்மிகநம்பிக்கையாகும்.


Saturday, January 23, 2016

மகாமகம் 2016


தேதி : 22.02.2016 நேரம்: பிற்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை
மகாமகம் உருவாகுதல்.

இந்திய திருநாட்டில் உள்ள மாநிலங்களில் திருக்கோயில்களுக்கு பிறப்பிடமாக பெரிதும் விளங்குவது தமிழகம் ஆகும். இத்தமிழக மக்களை வாழ வைக்கும் நதிகளில் ஒன்றானதும் தஞ்சைத் தரணியை
வளம்கொழிக்கச் செய்வதுமான காவிரித் தாயும், அரசலாறும் மாலையிட்டது போல் சூழப்பெற்றது தான் குடந்தை மாநகரம். இந்நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகப்பெருவிழா வருகிற 22.02.2016ம் தேதி அன்று சூரியன் கும்பராசியிலும் குரு சிம்ம ராசியிலும் வரும் போது பெளர்ணமியில் மக நட்சத்திரம் அன்று இடப லக்னத்தில் சேரும் புனித நாளில் நடைபெற உள்ளது அன்றைய தினம்
பதினான்கு உலகங்களிலும் உள்ள தேவர்கள் யாவரும் புனித நீராட வருகிறார்கள் என்பது வரலாறு. இறைவனுடைய உபதேசங்களே வேத சாஸ்திரங்கள். அவைகளில் மனிதர்களின் பாவங்களை போக்கிக் கொள்ள பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அவ்வழிகளில் தீர்த்த ஸ்நானம் மிகச் சிறந்த ஒன்றாகும். அதிலும் மகாமகத்தினத்தன்று மகாமகக் குளத்தில்
புனித நீராடுதலுக்கு ஈடானது ஒன்றுமில்லை. இப்புனித மகாமகம்
நடைபெறு வதற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.

ஒரு சமயம் கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகள் ஒன்று சேர்ந்து கயிலாய மலை சென்று சிவபெருமானை வணங்கி, எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெரிய பாதகங்களைச் செய்தவர்களும், நீராடி எல்லா பாவங்களையும் எங்களிடம் விட்டுவிட்டு நற்கதி அடைந்து
வருகிறார்கள். எங்களிடம் விட்ட பாவங்களை நாங்கள் எங்கு சென்று போக்கிக் கொள்வது என்று கேட்டார்கள். அப்போது இறைவன் தீர்த்த
தேவதைகளிடம் கீழ்க் கண்டவாறு கூறினார்.



திருக்குடந்தையில் மகாமகத்தன்று மகாமக் குளத்தில் நீராடுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் உங்களைவிட்டு விலகுவதோடு, அவர்களிடமிருந்தும் பாவங்ளை விலகிவிடும் என்றார். உடனே ஒன்பது
தீர்த்தங்களும் கன்னிகை வடிவெடுத்து திருக்குடந்தை வந்து மகாமகக்குளத்தில் புனித நீராடி, வடகரையில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் வந்தமர்ந்து அருள் பாலித்து வருகின்றனர். இந்த மகாமக தீர்த்தத்தை ஒரு தடவை வணங்கினால் எல்லா தேவர் களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தை ஒரு முறை சுற்றி வந்தால், இந்த பூமியை நூறு முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தில் ஒரு தடவை நீராடினால் கங்கையில் நூறு ஆண்டுகள் வாழ்ந்து மூன்று காலமும் நீராடிய பலன் கிடைக்கும். இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தில் வடபுறத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில்நீராடியவர்களுக்கு தனது கோத்திரம். மனைவியின் கோத்திரம், மாதா மகன் கோத்திரம், ஆகிய ஏழு கோத்திரங்களையும் சேர்ந்த வர்கள் (ஏழு தலைமுறைகளுக்கு) நற்கதி அடைவர். வடபுறத்தில் உள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து
கங்கை வருகிறது. அங்கு பல குமிழிகள் இடப லக்னத்தில் ஏற்படுவதைக் காணலாம். இந்தக் குளத்தில் 16 கிணறுகள் உள்ளன 20 தீர்த்தங்கள் உள்ளன. இந்திய திருநாட்டில் கும்பமேளாக்கள் புனித நதிகளில் மட்டுமே நடந்து வருகிறது. கும்பகோணத்தில் நடைபெறும் புனித நீராடல் விழா மகாமகத் திருக்குளம் மற்றும் காவிரி நதிக்கரையில் நடைபெறுவதால் இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாக்களில் இது மகா கும்பமேளா
என்று அழைக்கப்படுகிறது மகாமகக் குளத்தில் நீராடுமுன் காவிரியில்
சங்கல்பம் செய்து நீராட வேண்டும். மகாமகத்தன்று அருள்மிகு ஆதிகும் பேஸ்வரர், அருள்மிகு காசி விசுவநாதர். அருள்மிகு அபிமுகேஸ்வரர். அருள்மிகு கெளதமேஸ்வரர், அருள்மிகு ஏகாம்ப ரேஸ்வரர், அருள்மிகு நாகேஸ்வரர், அருள்மிகு சோமேஸ்வரர், அருள்மிகு ஆதிகம்பட்டவிசுவநாதர், அருள்மிகு கோடீஸ்வரர், அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அருள்மிகு பாணபுரீஸ்வரர், அருள்மிகு அமிர்த கலசநாதர் ஆகிய பன்னிரண்டு சைவ தலங்களுக்கும், அருள்மிக சார்ங்கபாணி, அருள்மிகு இராமசாமி, அருள்மிகு ஹனுமார், அருள்மிகு
சாரநாராயணப்பெருமாள், அருள்மிகு ஆதிவராகபெருமாள் திருக்கோயில்,
அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அருள்மிகு சக்கரபாணி
பெருமாள் ஆகிய ஏழு வைணவத் தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிக பலனைத் தரும். மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு சைவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி மகாமகக்குளம் சென்று தீர்த்தம் ஆடும். அதே போல் ஐந்து தலங்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு காவிரி சென்று தீர்த்தம் ஆடும். எனவே இந்த தீர்த்தவாரி நடைபெறும் புனித நாளான 22.02.2016 அன்று திருக்குடந்தை வாருங்கள்; புனித நீராடுங்கள்;  பிறவிப் பெறும் பயன் பெறுங்கள். குடந்தையில் நீராட குலம் தழைக்கும்! வருக ! அருள் பெறுக






Monday, January 18, 2016

பீஷ்ம ஏகாதசி ! "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்" பிறந்த நாள் ! ( 20-ஜனவரி -2016)



குருக்ஷேத்ரத்தில் தான் கண்ணன் சொன்ன பகவத் கீதையும் தோன்றியது, கண்ணன் கேட்ட "விஷ்ணு சஹஸ்ர நாமமும் " தோன்றியது. எனவேதான் குருக்ஷேத்ரம், தர்மக்ஷேத்ரம் என்று போற்றப்படுகிறது. இரண்டும் தோன்றியது ஒரு ஏகாதசியில் தான் !

பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது ஸ்ரீ கிருஷ்ணன் பீஷ்மரை, பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி கோருகிறார். பீஷ்மரும் அவ்வாறே அவர்களுக்கு பல தர்மோபதேசங்களை செய்து விட்டு, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை போற்றும் " ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் " என்ற திவ்ய ஸ்தோத்ரத்தையும் உபதேசிக்கிறார். இப்படிப்பட்ட ஆயிரம் நாமங்களால் போடப்படும் ஸ்ரீ மஹா விஷ்ணு வேறு யாரும் அல்லர். அவரேதான் இந்த ஸ்ரீ கிருஷ்ணர் ! என்ற உண்மையையும் கூறி ஸ்ரீ பரந்தாமனை வணங்குகிறார். 

இந்த புண்ணிய நாள்,   பீஷ்ம பிதாமகரின் பெயரால் "பீஷ்ம ஏகாதசி " என்றே வழங்கபடுகிறது. இந்த வருடம் "பீஷ்ம ஏகாதசி ", வரும் புதன் கிழமை ( 20-ஜனவரி-2016 ) அன்று வருகிறது ( தகவல் : ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம் ).

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் தவறாமல் " ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை" பாராயணம் செய்து, சகல க்ஷேமத்தையும் பெற எல்லாம் வல்ல அந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரிய வேண்டுகிறேன். ( தினமுமே "ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் " செய்வது நற்பலன்கள் தரும். )



Vishnu Sahasranamam link: